வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை வழிநடத்தி செல்லக்கூடிய அரசு கேந்திரத்தையும், அதன் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் ஒரு ஜனநாயக நடைமுறைதான் தேர்தலாகும். வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை இழந்து விடக்கூடாது. மாறாக, தங்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டிக்கொள்ள வாக்களித்து, மாநில அரசை தேர்வு செய்ததில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று வாக்காளர்களை நெகிரி செம்பிலான், நிலாய் சட்டன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஜே அருள்குமார் கேட்டுக்கொண்டார்.
நீலாய் சட்டமன்றத் தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அருள்குமார் களம் இறங்கியுள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


