கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
பள்ளிகளில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினர் மீதும் கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.
பள்ளித் தலைமையாசியர், முதல்வர், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா ஆகிய தரப்பினர் பகடிவதைச் சம்பவங்களை மூடி மறைக்க முயற்சித்தால் அவர்களைக் கல்வி அமைச்சு தற்காக்காது என்று ஃபாட்லீனா சீடேக் நினைவுறுத்தினார்.
பகடிவதைச் சம்பவம் குறித்து முன் கூட்டியே தெரியப்படுத்துவது மூலம் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உரிய வழிகாட்டலையும், நல்லுரைகளையும் கல்வி அமைச்சினால் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.








