Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எச்.ஆர்.டி. கோர்ப். பிற்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எச்.ஆர்.டி. கோர்ப். பிற்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை

கோலாலம்பூர், டிச.9-


மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டு நிதி வாரியமான எச்.ஆர்.டி. கோர்ப்.க்கு எதிரான விசாரணை முடிவடையவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

தேசிய கணக்காய்வுக்குழு தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் ஒரு கோப்பை மட்டுமே அடிப்படையாககொண்டு விசாரணை முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , விசாரணை முடிவடையவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

எச்.ஆர்.டி. கோர்ப். மீதான விசாரணை முடிவடைந்து விட்டதாக எதன் அடிப்படையில் கூறப்பட்டது என்பது தெரியவில்லை.

எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையம் என்ற முறையில் அந்த நிதி வாரியத்திடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →