குவாந்தான், ஜூலை.30-
பகாங் மாநிலத்தில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், முழு நேரமும் அரசியலில் உழன்றுக் கொண்டு இருக்காமல், தங்களைத் தேர்வு செய்த தொகுதி மக்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்து, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுமாறு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
முழு நேரமும் அரசியலில் மூழ்கிக் கிடப்பதைக் காட்டிலும் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் சேவைகளை வழங்கிடுமாறு அவர் வலியுறுத்தினார்.
மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட சுல்தான் என்று போற்றப்படும் சுல்தான் அப்துல்லா, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை, அடிக்கடி சந்திப்பதைப் பொறுப்பு மிகுந்தக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார்.








