Oct 2, 2026
Thisaigal NewsYouTube

புஞ்சாக் அராபெல்லா சாலை மீண்டும் போக்குவரத்து திறக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புஞ்சாக் அராபெல்லா சாலை மீண்டும் போக்குவரத்து திறக்கப்பட்டது

குவாந்தான், நவம்பர்.29-

கேமரன் மலை, தானா ராத்தாவில் உள்ள புஞ்சாக் அராபெல்லாவிற்குச் செல்லும் சாலையில் நேற்றிரவு நிலச்சரிவு நிகழ்ந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட அந்த சாலை, இன்று மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது.

700 க்கும் மேற்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய புஞ்சாக் அராபெல்லா அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்குச் செல்கின்ற பிரதான சாலையில், மலைப் போல் குவிந்த மண் மற்றும் கற்கள் அகற்றும் பணி, நேற்றிரவு முழு வீச்சில் நடைபெற்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து அந்த வீடமைப்புப் பகுதிக்குச் செல்கின்ற பிரதான சாலை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவினால் 700 குடும்பங்களின் பிரதான போக்குவரத்து நேற்று இரவு 8.30 மணியளவில் முற்றாகத் துண்டிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →