Dec 2, 2025
Thisaigal NewsYouTube
துன் மகா​தீர் - முகை​தீன் யாசின் புதிய கூட்டணி
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீர் - முகை​தீன் யாசின் புதிய கூட்டணி

Share:

அன்வாரை வீ​​ழ்த்தும் அடுத்தக் கட்ட நகர்வா?

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுடன் ஒத்துழைப்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது தயாராகியிருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வீழ்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் நலனை பேணுவதற்கு இருவரும் ஒன்றிணைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்​தினாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் மகா​தீரும், முகை​தீனும் ஒன்றிணைந்து கையில் எடுத்த அதே பிரம்மாஸ்திரத்தைதான் இப்போதும் கையில் எடுத்துள்ளனர் என்று பா​சீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான ஹசான் அப்துல் கரீம் கூறுகிறார்.

அன்று தங்களின் பொது எதிரியான பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீழ்த்துவதற்கு துன் மகா​தீரும், முகை​தீனும் ஒன்றிணைந்தனர். தற்போது, பத்தாவது பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு அவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதைப் போல் உள்ளது என்று ஹசான் அப்துல் கரீம் மேற்கோள்காட்டுகிறார்.

பாஸ் கட்சியுடன் முகை​தீன் இணைந்து முன்னெடுத்துள்ள மலாய் இஸ்லாம், துன் மகா​தீர் தொடங்கியுள்ள மலாய் பிரகடனம் ஆகியவை பெரும் சக்தியாக உருவெடுத்து, மடானி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தயாராகி வருவதைப் போல் தற்போதைய அரசியல் நகர்​வுகள் உள்ளன என்று ஒரு சட்ட நிபுணருமான ஹசான் அப்துல் கரீம் கூறுகிறார்.

Related News