Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பாதாளத்தில் ஆடவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதாளத்தில் ஆடவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

தாப்பா, ஜூலை.12-

பேரா, தாப்பாவில் ஜாலான் பஹாங் சாலையின் 23 ஆவது கிலோமீட்டரில் பாதாளத்தில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தது இன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

பிற்பகல் 1.48 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலத்தை மீட்பதற்கு போலீசாருக்குத் தாங்கள் உதவியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார். பிரதான சாலையில் உள்ள பாதாளத்தில் கிட்டத்தட்ட 3.5 மீட்டர் ஆழத்தில் அந்த ஆடவர் இறந்து கிடந்தார்.

உள்ளூரைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், நேர்த்தியான உடை அணிந்த நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →