Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மெக்ஸ் விரைவுச்சாலை விபத்து: இராணுவ அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மெக்ஸ் விரைவுச்சாலை விபத்து: இராணுவ அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

மெக்ஸ் எனப்படும் மாஜு விரைவுச்சாலையில், போதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டி, வங்காள தேசத்தைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலத்தின் உயிரிழப்புக்கு காரணமான, 31 வயது இராணுவ அதிகாரியின் மீது கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, மாஜு விரைவுச்சாலையில், முசாஹித் மில்லாத்-ஐ கொலை செய்ததாக,ஜாட் ஃபைத் அர்ஹான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அத்துடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், தன் மீதான கொலைக் குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாக ஜாட் ஃபைத் அர்ஹான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நீதிபதி இல்லி மரிஸ்கா காலிசான், இவ்வழக்கு விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதி நிர்ணயித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை