Nov 1, 2026
Thisaigal NewsYouTube

மலேசியக் கடப்பிதழை 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் வசதி: இணையவழியிலும் அறிமுகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியக் கடப்பிதழை 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் வசதி: இணையவழியிலும் அறிமுகம்

மலேசியர்கள் தங்களது கடப்பிதழை வழக்கமான ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை குடிநுழைவுத் துறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியது.

எனினும், இந்த வசதி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடவுச்சீட்டை புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மைஓன்லைன் பாஸ்போர்ட் இணையவழி முறையிலும் கடப்பிதழைப் புதுப்பிக்கும் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மலேசியர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப ஐந்து அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழைத் தேர்வு செய்து புதுப்பித்துக் கொள்ளலாம் என குடிநுழைவுத் துறை தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் புதிய வசதியானது புதுப்பிக்கும் நடைமுறையை மேலும் எளிதாக்குவதுடன், பொதுமக்களுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →