பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைப் பயன்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மேன்மை தங்கிய கிளந்தான் மாநில சுல்தான் சுல்தான் முஹமட் V வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, யுஎம்கே எனப்படும் யுனிவெர்சிட்டி மலேசியா கிளந்தான் பட்டதாரிகள், தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்களைத் தொழில்முனைவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளாகக் கருத வேண்டும் என்றும், புதிய வணிக மாதிரிகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று, எல்லை தாண்டிய இணையவழி வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், உள்ளூர் சந்தைகளின் விநியோகச் சங்கிலிகளையும் நவீனப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட சுல்தானின் அரச உரையை, கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு முஹமட் ஃபக்ரி பெட்ரா, யுஎம்கே பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 16ஆவது பட்டமளிப்பு விழாவில் வாசித்தார்.








