புத்ராஜெயாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற கார்மின் ரன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது ஆடவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஓட்டப்பந்தயத்தின் இடையே மயங்கி விழுந்த அவரை மீட்டு புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹமட் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காலை 6.54 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே உடல்நலப் பாதிப்புகள் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூராய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.








