கிளந்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது மாநில அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என அம்மாநில துணை மந்திரி பெசார் ஃபட்ஸ்லி ஹசான் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துடனான அனைத்துலக எல்லை காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கிளந்தானைத் தங்களின் கடத்தல் வழியாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, 2025-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்களில், 1,105 பேர் போதைப்பொருள் அடிமைகள் மற்றும் அதன் பயன்படுத்துவோர் என்ற விகிதத்துடன் கிளந்தான் மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
அடுத்ததாக திரங்கானுவில் 997 பேரும், பெர்லிஸில் 970 பேரும், கெடாவில் 965 பேரும் அடிமைகளாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதன் அடிப்படையில், மாநில போலீசார் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.








