Nov 1, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் சட்டவிரோதமாக இயங்கிய இரவு விடுதியில் 417 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் சட்டவிரோதமாக இயங்கிய இரவு விடுதியில் 417 பேர் கைது

கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த இரவு விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீசார் நடத்திய சோதனையில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த விடுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாலை 2.30 மணி முதல் காலை 10.30 மணி வரை, சோதனை நடத்தப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 299 ஆண்களும் 118 பெண்களும் அடங்குவர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 417 பேரும் ஆவணப் பதிவுகள் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைக்காக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →