Nov 1, 2026
Thisaigal NewsYouTube

புக்கிட் அந்தராபாங்சா அருகே இரு கார்கள் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புக்கிட் அந்தராபாங்சா அருகே இரு கார்கள் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

கோலாலம்பூரில் எதிர் திசையில் சென்ற வாகனம் ஒன்று எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை புக்கிட் அந்தராபாங்சா அருகே எம்ஆர்ஆர்2 விரைவுச்சாலையின் 23ஆவது கிலோமீட்டரில் பெரோடுவா மைவி மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் கார்கள் மோதிக் கொண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிகாலை 12.40 மணியளவில் தாமான் மெலாவாத்தியிலிருந்து செராஸ் நோக்கிச் சென்ற மைவி காரானது, கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்பாதையில் சறுக்கி எதிர் திசையில் வந்த காருடன் மோதியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் மைவி காரை ஓட்டிச் சென்ற ஆண் தலையில் கடுமையான காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →