Nov 1, 2026
Thisaigal NewsYouTube

கார் விபத்து: குவார் செம்பெடாக் சட்டமன்ற உறுப்பினர், மகன் காயமடைந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் விபத்து: குவார் செம்பெடாக் சட்டமன்ற உறுப்பினர், மகன் காயமடைந்தனர்

கெடா மாநிலம், யான் அருகே உலு செடாகாவில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில், குவார் செம்பெடாக் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் காஃபார் சாட் மற்றும் அவரது மகன் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

அவர்கள் பயணம் செய்த எஸ்யுவி வாகனம், மற்றொரு காருடன் மோதியதில் சாலையில் கவிழ்ந்ததாக யான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அய்காப் டுண்டிங் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.41 மணியளவில், உலு செடாகா தேசியப் பள்ளிக்கு முன்பு, இந்த விபத்து நிகழ்ந்ததாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →