Nov 1, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம் நீங்கியது: சிலாங்கூரில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம் நீங்கியது: சிலாங்கூரில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் என மாநிலக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, புகைமூட்டத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பரவிய புகை மாசு, கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் பெருமளவில் நீங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் காற்று மாசுக் குறியீடு 100-க்கும் குறைவாக, மிதமான அளவில் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →