Aug 15, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் இடையூறு:மருத்துவமனை இயக்குநர் பணியிடமாற்றம்
தற்போதைய செய்திகள்

பாலியல் இடையூறு:மருத்துவமனை இயக்குநர் பணியிடமாற்றம்

Share:

சபாவில் மருத்துவமனை ஒன்றின் இயக்குநர் ஒருவர் முறைகேடு, பாலியல் அத்துமீறல் மற்றும் பணியிடத் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் பரபரப்பாகப் பரவியதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு உட்புற விசாரணையை மேற்கொண்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில், அந்த மருத்துவமனை இயக்குநர் சபா சுகாதாரத் துறையில் வேறு துறைக்கு மாற்றப்பட்டு, மருத்துவ அதிகாரியாக மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு முழுமையான ஆதரவும் மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான பணிச் சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related News

பாலியல் இடையூறு:மருத்துவமனை இயக்குநர் பணியிடமாற்றம் | Thisaigal News