சிலாங்கூர், சபாக் பெர்னாமில் நிகழ்ந்த பயங்கரமான பணியிட விபத்தில் 56 வயதான பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராண்ட் சபாக் ஹாட்டல் அருகிலுள்ள “நீர்ப் பாசனக் கதவு”, பகுதியில் பணியில் இருந்த போது, அவரது தலைத்துண்டு திடீரென நீர்பாசனக் கதவு இயந்திர உருளையில் சிக்கியது.
இதில் சிக்கிய அவர், நீர்வாயில் மேல் பகுதியில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறுதி செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணை போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








