Sep 6, 2026
Thisaigal NewsYouTube
போர்ட் கிள்ளானில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ
தற்போதைய செய்திகள்

போர்ட் கிள்ளானில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

Share:

இன்று சிலாங்கூர், போர்ட் கிள்ளானில் சுமார் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத் தீ பயங்கரமாகப் பரவியதால், அடர்த்தியான சாம்பல் நிறப் புகை வானத்தை நோக்கி எழுந்தது!

ஜாலான் பெரிங்கின், ஏரியா 13 பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ, சுமார் மூன்று கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுடன், ஏராளமான மரங்கள் மற்றும் தாவரங்கள் கருகின. தீ மேலும் பரவாமல் தடுக்க, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

மதியம் 1.24 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்த நிலையில், போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்தனர்.

போர்ட் கிள்ளான் மற்றும் ஸ்ரீ ஆண்டாலாஸ் நிலையங்களைச் சேர்ந்த 14 தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு தண்ணீர் வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து