Sep 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் உரிமம் இல்லாத சுற்றுலா நிறுவனங்களுக்கு அதிரடி சோதனை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் உரிமம் இல்லாத சுற்றுலா நிறுவனங்களுக்கு அதிரடி சோதனை

Share:

கோலாலம்பூரில் உரிமம் இல்லாமல் சுற்றுலா சேவைகளை நடத்தி வந்தவர்களுக்கு எதிராக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது!

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த அமலாக்க நடவடிக்கையில், 1992 ஆம் ஆண்டு சுற்றுலாத் தொழில் சட்டத்தின் கீழ் 15 நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், உரிமம் இன்றி சுற்றுலா வர்த்தகம் நடத்தியதாக 9 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 சுற்றுலாத் தளங்கள், 9 வர்த்தக வளாகங்கள் மற்றும் 3 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், உரிய உரிமம் இல்லாமல் சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களையும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல தனியார் அல்லது உரிமம் பெறாத வாகனங்களைப் பயன்படுத்தியது, உரிம நிபந்தனைகளை மீறியது மற்றும் உரிமம் இல்லாதவர்களுடன் வர்த்தகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைகள் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

உரிமம் இல்லாமல் சுற்றுலா சேவைகளை வழங்குவோர் உடனடியாக அவற்றை நிறுத்துமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து