Sep 12, 2026
Thisaigal NewsYouTube
“தலைசுற்றல் என்று நினைத்தேன்!” – பினாங்கில் நிலநடுக்க அதிர்வு!
தற்போதைய செய்திகள்

“தலைசுற்றல் என்று நினைத்தேன்!” – பினாங்கில் நிலநடுக்க அதிர்வு!

Share:

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பினாங்கின் சில பகுதிகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது!

இன்று மாலை 6.54 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பினாங்கிலும் உணரப்பட்டதால், உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்!

அப்போது நடந்ததைப் பற்றி பினாங்கு, புலாவ் திக்குஸ் பகுதியில் 7ஆவது மாடியில் இருந்த 50 வயது ஆரோன் லிம் கூறிய தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டடம் அசைந்தது! முதலில், தனக்கு தலைசுற்றல் ஏற்பட்டு விட்டதாகவே அவர் நினைத்துள்ளார். ஆனால்... அது தலைசுற்றல் அல்ல — நிலநடுக்கத்தின் அதிர்வு!

இதற்கிடையே, தெலுக் கும்பாரில் அதிர்வுகளை உணர்ந்த சிலர் அச்சத்தில் அலறியபடி வெளியே ஓடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!

இந்த நிலநடுக்கம் 154 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மேற்கு கரையோரப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமாக — சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்