Oct 12, 2026
Thisaigal NewsYouTube

காப்பிக் கடைக்குள் கார் பாய்ந்தது - மாது உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காப்பிக் கடைக்குள் கார் பாய்ந்தது - மாது உயிரிழந்தார்

சுங்கை பட்டாணி, ஏப்ரல்.28-

எதிர்பாராத விதமாக காப்பிக் கடைக்குள் கார் ஒன்று மின்னல் வேகமாகப் பாய்ந்ததில் காலைச் சிற்றுண்டியை அருந்திக் கொண்டு இருந்த 55 வயது மாது மீது மோதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் சுங்கை பட்டாணியில் நிகழ்ந்தது என்று கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

காரைச் செலுத்திய நபர் திடீரென்று பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளானதால், கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி காப்பிக் கடைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி அஸாருடின் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →