Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மானிய எல்பிஜி எரிவாயுவை முறைகேடாக மாற்றிய இரு வங்காளதேசப் பிரஜைகளுக்கு 5 மாத சிறை
தற்போதைய செய்திகள்

மானிய எல்பிஜி எரிவாயுவை முறைகேடாக மாற்றிய இரு வங்காளதேசப் பிரஜைகளுக்கு 5 மாத சிறை

Share:

மானிய விலையில் வழங்கப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயுவான எல்பிஜியை முறைகேடாக மாற்றி பதுக்கிய குற்றத்திற்காக இரண்டு வங்காளதேசப் பிரஜைகளுக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 5 மாத சிறைத் தண்டனை விதித்தது.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து கடந்த மே 19ஆம் தேதி காப்பார் பகுதியில் உள்ள பெயரிடப்படாத ஒரு வளாகத்தில் சோதனை நடத்தினர்.

போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முறையான அனுமதியின்றி 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி கலன்களிலிருந்து 50 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி கலன்களுக்கு எரிவாயுவை மாற்றும் ‘டிகேன்டிங்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

சுமார் 40 வயதுடைய இரு வங்காளதேசப் பிரஜைகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி முஜிப் பின் சரோஜி, அவ்விருவருக்கும் தலா 5 மாத சிறைத் தண்டனை விதித்தார்.

இது தொடர்பாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஹனிப் பின் டத்தோ’ அசாரி வெளியிட்ட அறிக்கையில், மானியப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தும் எந்தத் தரப்பினரிடமும் அமைச்சு சமரசம் செய்யாது எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மானியங்கள் தகுதியான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானியப் பொருட்கள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்