Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாக்காவில் காரினுள் இறந்து கிடந்த தாய், மகள் - கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமா?
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் காரினுள் இறந்து கிடந்த தாய், மகள் - கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமா?

Share:

மலாக்கா, செப்டம்பர்.18-

மலாக்காவில் நேற்று நள்ளிரவு புரோட்டோன் எக்ஸோரா வகை கார் ஒன்றில், 57 வயது தாயும், அவரது 25 வயது மகளும் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

அவர்கள் இருவரும் காரினுள் பரவிய கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றது.

காரினுள் ஸாபானா அபு ஹுசேனும் அவரது மகள் நூர் ஷாஃபிகா ஒத்மானும் சுயநினைவின்றி காணப்பட்ட நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, மலாக்கா காவல்துறைத் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

Related News