கோலாலம்பூர், அக்டோபர்.17-
தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாகனமோட்டிகள், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது சாலை நிலவரம் பற்றிய வழிகாட்டலுக்குரிய செயலியை பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று அக்டோபர் 17, 18 மற்றும் 21 ஆம் தேதிகளில் தீபாவளி விடுமுறை மற்றும் கூடுதல் பள்ளி விடுமுறையால் 22 லட்சம் வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனமோட்டிகள் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கும், தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தங்கள் பயண முறையை திட்டமிட்டுக் கொள்வதற்கும், நெடுஞ்சாலை நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் பிளஸ் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மக்கள் தங்கள் கைபேசியில் MyPLUS-TTA என்ற செயலியைப் பதிவேற்றம் செய்து கொள்ளும்படி அந்த நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.








