Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.12-

திரெங்கானுவின் Rhu Muda கடற்கரையில் நச்சுத்தன்மை கொண்ட " Portuguese Man of War " ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திரங்கானு மலேசியப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் , சுற்றுச்சூழல் புலத்தின் மூத்த விரிவுரையாளர் Roswati Md Amin.
இந்த ஜெல்லிமீன்கள் நச்சுள்ளவை , அவை இறந்த பின்பும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவற்றை தொட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இந்த உயிரினங்கள் நீரோட்டத்திற்கும் காற்றின் திசைவேகத்திற்கும் ஏற்ப நகர்கின்றன, தற்போதைய பருவமழை காற்றின் காரணமாக அவை கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஜெல்லிமீன்கள் பொதுவாக பசிபிக் கடல், இந்தியக் கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் கடற்கரையில் குவிந்துள்ளதால், குறிப்பாக குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று Roswati அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களும் தங்கள் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்