Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர ஏற்பாடு
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர ஏற்பாடு

Share:

வட்டாரத்தில் உள்ள 5 தோட்டங்கள் உட்பட மொத்தம் 8 தோட்டங்களில் வேலை செய்து வருகின்ற பால் மரம் வெட்டுத் தொழிலாளர்கள் 300 பேர் இம்மாதத்துடன் தங்கள் வேலையை இழக்கின்றனர்.

பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய வேலை இழப்பீட்டு அனுகூலங்களை மாநில மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முறையாக பெற்றுத்தர வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருவதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் தெரிவித்தார்.

 வேலை இழப்புக்கு ஆளாகும் 300 தொழிலாளர்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் அல்லது அருகிலுள்ள மற்ற தோட்டங்களில் வேலை செய்வதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை நெகிரி செம்பிலான் மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் மற்றும் மாநில செயலவை உறுப்பினர்கள் செய்து கொடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ஜி.சங்கரன் கூறினார்.

லாடாங் புக்கிட் பெலா ,லாடாங் கெலாமா லாடாங் கெல்பின், லாடாங் நியூ லாபு , லாடாங் சயின்ட் ஹெலெர், லாடாங் சிலவு, லாடாங் ஜுவாசெ மற்றும் லாடாங் பெகாலிங் ஆகிய எட்டு தோட்டங்களை சேர்ந்த 300 பால் மர வெட்டுத் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகின்றனர் என்று டத்தோ சங்கரன் சுட்டிக்காட்டினார்.

சிரம்பானில் நெகிரி செம்பிலான் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க கட்டிடத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் மாநில செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் திசைகள் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் டத்தோ ஜி.சங்கரன் இதனை தெரிவித்தார்.

தவிர தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து ​தோட்டத் தொழிலாளர்களும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றனர். முதல் கட்டமாக பகா​ங் மாநிலத்தில் இந்த மருத்துவப் பரிசோதனை திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. அடுத்தது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.

Related News