Aug 12, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல்காரர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர் பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், மே.31-

போதைப்பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 69. 82 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இடைக்கால இயக்குநர் மாட் ஸானி சாலாஹூடின் சே அலி தெரிவித்தார்.

44 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டது மூலம் போதைப்பொருள் மற்றும் டொயோட்டா வேல்ஃபையர் ரக வாகனம் உட்பட சுமார் 2 லட்சத்து 16 ஆயிரத்து 457 ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நபர் கடந்த ஆண்டு நவம்பர் முதல் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது பூர்வாங்க புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மாட் ஸானி கூறினார்.

Related News