Dec 3, 2025
Thisaigal NewsYouTube
27 வயது பெண் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

27 வயது பெண் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.20-

கோலாலம்பூர், பண்டார் பாரு ஶ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 27 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் நேற்று, கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு கொள்வதில், வீட்டின் உரிமையாளர் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து, வீட்டிற்குச் சென்று பார்வையிடுமாறு, அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

பாதுகாவலர் ஒருவர், அந்த வீட்டின் அருகில் சென்று பார்த்த போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, வீட்டின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் வீட்டின் கதவு, உரிமையாளரைக் கொண்டு திறக்கப்பட்டு, உள்ளே சென்று பார்த்த போது, அந்தப் பெண் வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் உடல் கிட்டத்தட்ட அழுகி விட்டதாக ஹூ சாங் ஹூக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு முற்பகுதியில் தனியொரு நபராக வசித்து வந்த அந்தப் பெண், வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலம் துணிகளை விற்பனை செய்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண்ணின் இறப்பை, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News