Jun 30, 2026
Thisaigal NewsYouTube
காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்
தற்போதைய செய்திகள்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

Share:

மலேசிய இசை ஜாம்பவான் மூத்தப் பாடகர் டத்தோ டிஜே டேவ், 1970-களில் வெளியான ஹரி ராயா பாடல்களின் ஈடுஇணையற்ற மெல்லிசை மற்றும் ஆன்மாவை இன்றைய நவீன காலத்திலும் மிஞ்ச முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளைக் கடந்தும் "Menjelang Hari Raya" போன்ற பாடல்கள் நிலைத்திருப்பதற்கு இசை அமைப்பாளர் -டத்தோ எஸ். அதானின் பங்களிப்பே காரணம் எனப் புகழாரம் சூட்டிய அவர், மலேசிய கலைஞர் நல வாரியத்தின் மூலம் நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருவதை பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டார்.

"ஹரி ராயாவின் இந்த உன்னத நாளில் டத்தோ டிஜே டேவ் ஒரு முக்கியமான உண்மையையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்றைய நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிவேக இசை உலகிலும், 1970-களின் பாடல்கள் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவற்றின் எளிமையும், ஆழமான உணர்வுகளுமே ஆகும்.

'அக்காலப் பாடல்கள் வெறும் இசையல்ல; அவை நம் மண்ணின் மணம் வீசும் நினைவலைகள்' என்று குறிப்பிட்ட டிஜே டேவ், இன்றும் வானொலியில் அந்தப் பழைய பாடல்கள் ஒலிக்கும்போது கிடைக்கும் அதே உற்சாகமும், மனநிறைவும் புதிய பாடல்களில் கிடைப்பது சவாலாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related News

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரக... | Thisaigal News