Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பாங்கி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் குறித்த வதந்திகளுக்குத் ஆலய நிர்வாகம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

பாங்கி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் குறித்த வதந்திகளுக்குத் ஆலய நிர்வாகம் விளக்கம்

Share:

பாங்கி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர வேண்டாம் என்று ஆலயத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ ரெங்கன் பத்துமலை கேட்டுக்கொண்டார்.

"பாங்கி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் செய்தியாளர்கள் கூட்டம் இன்று கிள்ளானில் நடைபெற்றது. வழக்கறிஞர் கேப்ரியல் சூசையன் முன்னிலையில் பேசிய ஆலய துணைத் தலைவர் ஸ்ரீ ரெங்கன் பத்துமலை, தங்கள் ஆலயம் 1950-ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் வழிபாட்டுத் தலமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இது ஒரு 'குடும்பக் கோவில்' எனப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், ஆலயம் முறையாக மலேசிய இந்து சங்கம் மற்றும் சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

பாங்கி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சட்டரீதியாகவும், நிபுணத்துவ முறையில் ஆலயப் பொறுப்பாளர்கள் நிர்வகித்து வருவதாக இந்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் கேப்ரியல் சூசையன் தெரிவித்தார்.

ஆலய நிலம் அரசாங்கத்தால் கேசட் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய கேப்ரியல் சூசையன், சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்."

பாங்கி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், குடும்பக் கோயில் என்று கூறப்படுவதை ஆலய செயலவை உறுப்பினர் பத்துமலை முருகன் வன்மையாக மறுத்தார். இது பொது மக்களுக்கு சொந்தமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டும், ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தியுள்ளார். எனவே பொது மக்களின் ஒத்துழைப்புடன் புதிய கோயில் ஒன்று கட்டப்படும் என்று பத்துமலை தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை