Sep 22, 2026
Thisaigal NewsYouTube
வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு
தற்போதைய செய்திகள்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

Share:

வங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் இன்று காலை பயணி ஒருவர் திடீரென தண்டவாளத்தில் மயங்கி விழுந்ததால், கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது.

காலை 6.52 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நடைமேடை ஊடுருவல் அவசர நிறுத்தம் உடனடியாக செயல்படுத்தப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்டவாளத்திற்கான மின்சாரமும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

அதேவேளையில், தண்டவாளத்தில் விழுந்த பயணியை எல்ார்டி நிலைய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டு, ஆரம்ப சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது நிலையம் மற்றும் நடைமேடையில் உதவி தேவைப்பட்டாலோ, பயணிகள் எல்ஆர்டி பாதுகாப்பு அதிகாரிகளையோ, நிலைய ஊழியர்களையோ உடனடியாக உதவிக்காக அணுகுமாறு ரேபிட் கேஎல் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, ரயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகள் மஞ்சள் கோட்டுக்கு பின்னால் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்றும் ரேபிட் கேஎல் நினைவூட்டியுள்ளது.

Related News