Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமாரின் 5 அதிகாரிகள் நீக்கம்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவகுமாரின் 5 அதிகாரிகள் நீக்கம்

Share:

மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 5 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐவரை தவிர அமைச்சர் சிவகுமாரிடம் பணியாற்றி வந்த மற்றொரு அதிகாரி மனித வள அமைச்சிலிருந்து பொதுச் சேவை இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் கூறியது.

லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் சிவகுமாரின் மூன்று அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கை செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதவள அமைச்சு சம்பந்தப்பட்ட மற்றொரு அதிரடி நடவடிக்கையாக இந்த 5 அதிகாரிகளின் பணி நீக்கம் பார்க்கப்படுகிறது.

Related News