கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-
இன்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி தனது 60 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய சிங்கப்பூர் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா தம்பதியர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அண்டை நாடுகள் என்ற முறையில் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அணுக்கமான இரு வழி உறவு, மேலும் வலுப் பெற வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாக இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








