Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆடவரை முதலை இழுத்து சென்று இருக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவரை முதலை இழுத்து சென்று இருக்கலாம்

கினபாத்தாங்கான், டிச.2-


ஆற்றோரத்தில் தனது படகை கழுவிக்கொண்டு இருந்த ஆடவரை முதலை கவ்விக்கொண்டு சென்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சபா, கினாபாத்தாங்கான், கம்போங் ஸ்ரீ கண்டாவைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில அந்த ஆடவரை தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

36 வயது கிஸ்மான் பாக்கோ என்ற அந்த நபர், ஆற்றோரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவரின் குடும்பதினர் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அவரை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாக முடுக்கி விடப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →