May 24, 2026
Thisaigal NewsYouTube
மெட்டா- வின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

மெட்டா- வின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 06-

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் தம்முடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட கருத்துக்களின் உள்ளடக்கங்களை நீக்கியதற்காக மெட்டா, தம்மிடம் கேட்டுக்கொள்ள மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்று மெட்டா- விற்கு பிரதமர் அறிவுறுத்தியிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு உரிய உபசரணையை மெட்டாவழங்க வேண்டும். இதில் இரட்டைப் போக்கு நிலைப்பாடு வேண்டாம் என்று சமூக ஊடகங்களை வழிநடத்தும் பிரதான நிறுவனமான மெட்டா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்

Related News