Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி
தற்போதைய செய்திகள்

மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி

Share:

தனது மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக தோட்டத் தொழிலாளி ஒருவர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

36 வயது ஆர். ரெத்தினசாமி என்று அந்த தோட்டத் தொழிலாளி கடந்த ஜுலை 31 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பினாங்கு, தாசிக் கெலுகோர், லாடாங் மேஃபிஎல்ட் தோட்டத்தில் 35 வயதுடைய தமது மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் கடும் தீக்காயங்களுடன் அந்த மாது உயிர்த் தப்பிய போதிலும் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரெத்தினசாமி எரியூட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரெத்தினசாமி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட அந்த நபர், எவ்வித சலனமின்றி காணப்பட்டார்.

தனது மனைவியை எரித்து கொலை செய்வதற்கு கொடூர எண்ணத்தை கொண்டு இருந்த ரெத்தினசாமி, ஓர் உடல் ஊனமுற்றவர் என்ற போதிலும் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்று பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் அமிரா ருசைனி வான் அப்துல் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

ரெத்தினசாமி புரிந்த குற்றத்திற்கு தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அவரை சிறையில் வைக்குமாறு வான் அமிரா ருசைனி வலியுறுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!