Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

மலேசிய சமூக பாதுகாப்பு நிறுவனமான 'பெர்கேசோ'வின் (Perkeso) கீழ் செயல்படும் டாயா கெர்ஜாயா 2.0 திட்டத்தில், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஊக்கத்தொகை கோரியதாக ஒரு தம்பதியினர் உட்பட மூவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தக உரிமையாளரான 45 வயது எம். எஸ். குணசீலன், அவரது 45 வயது மனைவி எஸ். தீன்மலர் மற்றும் 45 வயது ஏ. எஸ். ஷிஸ்மான் ஆகிய மூவர் மீதும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நீதிபதி ஷாருல் ரிஸால் மாஜிட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட குணசீலன், தீன்மலர் மற்றும் ஷிஸ்மான் ஆகிய மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை, 5 மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய பெர்கேசோ பணத்தை மாற்றுத் திறனாளிகள், பரோலில் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் தனிப்பட்ட தரவுகள், அவர்களின் அனுமதியின்றி திருடப்பட்டு, பெர்கேசோவின் டாயா கெர்ஜாயா 2.0 திட்டத்தின் கீழ் மோசடி செய்து பணம் பெற்றது தொடர்பில் சுமார் 100 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர் என்று எஸ்பிஆர்எம் நேற்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்