முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்படுவதற்கு முன்பு, ரஃபிஸியின் மனைவிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் குருந்தகவல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த குருந்தகவல் தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் உதவியைப் போலீசார் நாடியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ரஃபிஸியின் மனைவிக்கு மிரட்டல் விடுப்பதற்கு அந்நிய நாட்டவர் ஒருவரின் கைப்பேசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்தக் கைபேசியின் எண்கள் ஓர் அந்நிய நாட்டவருக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் சைம் டார்பி மாநாட்டு மையத்தில் இன்று போலீஸ் படையின் வர்த்தகக் குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் மேற்கண்டவாறு கூறினார்.








