
கோலாலம்பூர், ஶ்ரீ டேசா என்ட்ரெப்ரெனர்ஸ் பார்க்கில் உள்ள கட்டடத்தொகுதி ஒன்றில் காண்கிரேட் பீம் சரிந்து விழுந்து பத்து வாகனங்கள் சேதமுற்ற சம்பவத்தில் அந்த வீட்மைப்புப்பகுதியின் கட்டுமான குறைப்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் கட்டட கண்காணிப்புக்குழுத் தலைவர் நொரிசான் சுலைமான் தெரிவித்துள்ளார். எனினும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையிலான இச்சம்பவத்தில் அந்த பீம் எவ்வாறு சரிந்து விழுந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.இக்ராம் எனப்படும் மலேசியப் பொதுப் பணிக்கழகத்தின் விரிவான ஆய்வுக்கு பின்னரே உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் கட்டட நிர்மாணிப்பின் குறைபாடுகள் என்பது ஓர் ஊகம்தான் என்றாலும் விரிவான ஆய்வு அவசியமாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று செய்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பபவத்தில் அந்த 6மாடி கட்டடத்தின் நான்காவது மாடியில் நடைப்பாதையின் தற்காப்பு தடுப்பு சுவர் பீம் இடிந்து விழுந்ததில் 10 வாகனங்கள் கடுமையாக சேதமுற்றன.








