Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் சீராய்வு மனு மீதான வழக்கில் தடை உத்தரவைப் பெறுவதில் சட்டத்துறை அலுவலகம் தோல்வி
தற்போதைய செய்திகள்

நஜீப் சீராய்வு மனு மீதான வழக்கில் தடை உத்தரவைப் பெறுவதில் சட்டத்துறை அலுவலகம் தோல்வி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில், நஜீப்பிற்கு முன்னாள் மாமன்னரால் பிறப்பிக்கப்பட்ட ஓர் அரசாணை உத்தரவு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் அது குறித்து பொதுமக்கள் கருத்துரைக்கவும், அறிக்கை வெளியிடுவதற்கும் தடை விதிக்கக் கோரி, சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

வழக்கின் மனுதாரரான சட்டத்துறை அலுவலகம், இத்தகைய தடை உத்தரவைப் பெறுவதற்குத் தேவையான கோரிக்கை வரம்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே சட்டத்துறை அலுவலகத்தின் மனு நிராகரிக்கப்படுவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஏலிஸ் லோக் யீ சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்தத் தடை உத்தரவு, நியாயமான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் என்று தாம் கருதவில்லை என்று நீதிபதி சுட்டிக் காட்டினார்.

காரணம், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் பட்சத்தில் அந்த வழக்கு தொடர்பாக யாராவது அவதூறு விளைவிக்கும் தன்மையில் அல்லது அவமதிப்பை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டால் அவற்றைத் தடுப்பதற்கும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பிற சட்டங்கள் உள்ளன.

எனவே இதற்காக பிரத்தியேகமாக ஒரு தடை உத்தரவைச் சட்டத்துறை அலுவலகம் பெற வேண்டிய அவசியமில்லை என்று தாம் கருதுவதாக நீதிபதி லோக் யீ சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News