Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

ஜன.3-

எந்தவொரு கைதிக்கும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, சம்பந்தப்பட்ட கைதியால் மட்டுமே மாமன்னர் தலைமையிலான பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது. பிற தரப்பினர் பரிந்துரைக்க விரும்பினாலும், கைதி நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியது இஸ்தானா நெகாரா.

கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் செய்யப்பட்டக் குற்றங்களுக்கானப் பொது மன்னிப்பு, தண்டனை நிறுத்தி வைப்பு, தண்டனை குறைப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும். இது கூட்டர்சு அரசியலமைப்பின் பிரிவு 42 (1) இலும் 41 (2) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டத் தண்டனைய இரத்து செய்யவும், இடைநிறுத்தவும் அல்லது குறைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார் மாமன்னர். இந்த அதிகாரம், மாமன்னர் தலைமையில் செயல்படும் பொது மன்னிப்பு வாரியத்தின் அறிவுரையின் படி செயல்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது. பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்ப நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்