Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

Share:

கோலாலம்பூர் போலீஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகள், ஏ.சி.பி எனும் 'அசிஸ்டென்ட் கமிஷனர்' பதவியிலிருந்து எஸ்.எ.சி எனும் 'சீனியர் அசிஸ்டென்ட் கமிஷனர்' ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வைக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூல் நேரில் வருகை தந்து, புதிய பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்விற்கு தலைமையேற்றார்.

பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளின் விவரங்கள்:

• எஸ்.எ.சி பஸ்ரி சகோனி - புக்கிட் அமான் ஜே.எஸ்.ஜே டி7 பிரிவின் முதன்மை உதவி இயக்குநராக நியமனம்.

• எஸ்.எ.சி சஸாலி அடாம் - கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத் துறை ஜே.எஸ்.ஜே தலைவராக நியமனம்.

• எஸ்.எ.சி சுல்கர்னைன் சம்சுதீன்- சிலாங்கூர் மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை ஜே.எஸ்.ஜே தலைவராக நியமனம்.

• எஸ்.எ.சி கமருஸாமான் முகமது அலிப் - புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு ஈ1ஏ உதவி இயக்குநராக நியமனம்.

• எஸ்.எ.சி ஹஸ்லா பாச்சோக் - புக்கிட் அமான் ஜே.ஐ.பி.எஸ் பிரிவின் முதன்மை உதவி இயக்குநராக நியமனம்.

அதிகாரிகளுக்குப் பதக்கங்களை அணிவித்து உரையாற்றிய டத்தோ ஃபாடில் மர்சூல், இந்த பதவி உயர்வு என்பது அவர்களின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, முழு நேர்மை மற்றும் தொழில்முறையுடன் சுமக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த விழாவில் ஏ.சி.பி கீ ஹங் கீ கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தலைவராகவும், ஏ.சி.பி சைஃபுதீன்@ முகமது ஃபித்ரி அப்துல் ரஹ்மான் கோலாலம்பூர் சிறப்புப் பிரிவு துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்