Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!
தற்போதைய செய்திகள்

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

Share:

மலேசிய அல்சைமர் நோய் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் 200 சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டமளிப்பு விழா, சன்வே மெடிக்கல் சென்டரின் லோட்டஸ் ஹாலில் இன்று நடைபெற்றது.

இம்மாபெரும் நிகழ்வை மலேசியச் சுகாதாரத்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிபா ஹாஜர் தாயிப் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிபா, தனது சிறப்புரையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 15 சதவீத மக்கள் தொகை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக இருப்பார்கள் என்பதால், டிமென்சியாவை எதிர்கொள்ள சமூக விழிப்புணர்வும், அனுதாபமும், முறையான களப் பயிற்சியுமே மிக முக்கியத் தேவையாகும் என்றார்.

அமைப்பின் காப்பாளர் புவான் ஸ்ரீ வெண்டி ஓங் பேசுகையில் ஆரம்பக்கட்ட விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதன் மூலமும், நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமும் நோயாளிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும் என்று வலியுறுத்தினார். மேலும், முதியவர்கள் தங்களின் இறுதி காலம் வரை கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய அல்சைமர் நோய் அறக்கட்டளையின் உதவித் தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான ரூபி சியா, "200 இதயங்கள், ஒரு இலக்கு" என்ற உன்னதக் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, ஞாபக மறதி நோயை எதிர்கொள்ளும் ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இதில் துணை அமைச்சருடன் அனைத்துலக ரோட்டரி கிளப்பின் பல முக்கியப் பிரமுகர்கள், மருத்துவ வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்துகொண்டனர் என்றார்.

டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும், அவர்களை கையாளுவதற்கு சுமார் 200 பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக , ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜ் மேலம்பரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் மூலம் சமூகத்தில் டிமென்சியா பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே முதன்மை நோக்கமாகும். இந்தத் துறையில் எ.டி.ஃப்.எம் அமைப்பு மிகச் சிறந்த பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. இதுதொடர்பான பயிற்சிகளில் இணைய ஆர்வமுள்ள அனைவரும் 'மலேசிய அல்சைமர் நோய் அறக்கட்டளையான எ.டி.ஃப்.எம் - மை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்... | Thisaigal News