Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் ஒருவர் கருகி மரணம் - இருவருக்கு பலத்த காயம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் ஒருவர் கருகி மரணம் - இருவருக்கு பலத்த காயம்

Share:

வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 198.4 செமங்கோல் மலை ஓய்வு மையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார். அவரின் இரு நண்பர்களுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் பலியான ஆடவர் நெடுஞ்சாலை பராமரிப்புத் தொழிலாளி ஆவார். அவரின் கருகிய சடலம் ஒரு வேனில் இருந்து மீட்கப்பட்டது என பாகான் செராய் தீயணைப்பு - மீட்புப் படை நிலையத்தின் தலைவர் அஹ்மத் நூர் சியாம்சி ஜைனால்டின் தெரிவித்தார்.

இன்று காலை நடந்த இந்த விபத்தில் பலியானவரின் வேனும் ஒரு லாரியும் விபத்துக்குள்ளாகின. சாலையில் புற்களை வெட்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் எரிபொருளால் அந்த வேனில் தீ வேகமாகப் பரவியது.

பலியானவரொன் அடையாளம் இன்னும் கண்டறியபடாத நிலையில் அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும், காயத்திற்கு உள்ளான இருவரையும் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அஹ்மத் நூர் கூறினார்.

Related News