Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிஎல்கேஎன் தேசிய சேவை பயிற்சி ஜனவரியில் தொடங்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிஎல்கேஎன் தேசிய சேவை பயிற்சி ஜனவரியில் தொடங்கும்

கோலாலம்பூர், நவ. 16-


இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் பிஎல்கேஎன்.எனப்படும் தேசிய சேவை பயிற்சித்திட்டம் 3.0, வரும் ஜனவரி மாதம் பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கும் என்று தற்காப்புத்துறை துணை அமைச்சர் அட்லி சஹாரி தெரிவித்தார்.

இந்த பயிற்சிக்கு தொண்டூழிய அடிப்படையில் ஆண்கள் ஈடுபடுத்தப்படுவர். ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு முக்கிய பாடமுறைகளை கொண்டு, பரீட்ச்சாத்த அடிப்படையில் நடத்தப்படும். இந்த 14 நாட்களில் பின்னூட்டு கருத்துகள் கண்டறியப்படும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.

முதல் கட்டமாக கோலாலம்பூர், Rejimen 515 Askar Wataniah பயிற்சி மையத்தில் நடைபெறும். 18 முதல் 20 வயது இளையோர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →