Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டனில் ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி
தற்போதைய செய்திகள்

பிரிட்டனில் ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி

Share:

லண்டன், ஜூலை 5-

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான ஒரு தோல்வியை பிரதமர் ரிஷி சுனக்கின் Conservative கட்சி சந்தித்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர் ஸ்டார்மர், இந்த வெற்றியின் மூலம் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 326 க்கும் அதிகமான தொகுதிகளை கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது.

பிரிட்டனில் ஆட்சி அமைப்பதற்கு தொழிலாளர் கட்சிக்கு தேவையான 326 தொகுதிகளை கடந்து அது 410 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

பிரிட்டனில் கடந்த 2010 ஆம் ஆம் ஆண்டு முதல் ஆ ட்சியில் இருந்து வரும் Conservative கட்சி, படுதோல்வி அடைந்து இருப்பதை பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளார். அக்கட்சி இதுவரையில் 117 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்த படுதோல்வியின் மூலம் பிரதமர் பதவியை இழக்கிறார்.

மகிழ்ச்சி மிகுந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், நாம் சாதித்துவிட்டோம் என்று குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்