Apr 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 58,000-க்கும் அதிகமான  சிறார் அகதிகளுக்கு  கல்வி மறுப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 58,000-க்கும் அதிகமான சிறார் அகதிகளுக்கு கல்வி மறுப்பு

Share:

மலேசியாவில் சுமார் 58,000-க்கும் அதிகமான அகதி மற்றும் தஞ்சம் கோரும் சிறுவர்கள் முறையான கல்வியைப் பெற முடியாமல் தவிப்பதாக மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் ஆணையர் ஃபாரா நினி தசுகி கவலை தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஃபாரா நினி, ஐநா அகதிகள் அமைப்பின் புள்ளிவிவரப்படி மலேசியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் உள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலான சிறுவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினையைத் தீர்க்க, மாற்றுப் பள்ளிகளை அங்கீகரிக்க அரசு ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் அச்சிறுவர்கள் SPM போன்ற பொதுத் தேர்வுகளை எழுத வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தாய்லாந்து நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு, பெற்றோரின் அந்தஸ்தைப் பாராமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை வழங்க மலேசியா முன்வர வேண்டும் எனவும் ஃபாரா நினி கேட்டுக்கொண்டார்.

Related News