Sep 29, 2026
Thisaigal NewsYouTube
காலணிக்குள் எதோமிடேட் போதைப்பொருள் – இந்தோனேசியாவில் 5 மலேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

காலணிக்குள் எதோமிடேட் போதைப்பொருள் – இந்தோனேசியாவில் 5 மலேசியர்கள் கைது

Share:

காலணிக்குள் மறைத்து சுமார் 5 கிலோ எதோமிடேட் (Etomidate) எனப்படும் செயற்கை போதைப்பொருளை கடத்த முயன்றதாக 5 மலேசியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூரில் இருந்து ஏர்ஆசியா விமானம் மூலம் ஜகார்த்தா சென்ற அவர்கள், Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டனர்.

சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக சோதனையில், ஒவ்வொருவரின் காலணியின் அடிப்பகுதிக்குள்ளும் தலா 500 கிராம் எடையுள்ள வெள்ளை நிறப் பொடி அடங்கிய 2 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு தேசிய போலீஸ், போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ஏகோ ஹாடி சந்தோசோ தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மொத்தம் 10 பொட்டலங்களில் சுமார் 5 கிலோ எதோமிடேட் கைப்பற்றப்பட்டது.

மேலும், டெலிகிராம் மூலம் வழங்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட்ட 5 பேரும், ஜகார்த்தாவில் காலணிகளை சீன நாட்டவரிடம் ஒப்படைக்க இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அந்த நபரும் கைது செய்யப்பட்ட நிலையில், எதோமிடேட் கலந்த வேப் கருவிகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து 21,000 காலி ஏள் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 127.5 பில்லியன் ரூபியா, மலேசிய மதிப்பில் சுமார் RM33.8 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News