Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பாரந்தூக்கி இயந்திர  பழுதுபார்க்கும் போது நேர்ந்த விபத்து: பட்டறை உரிமையாளர் பலி
தற்போதைய செய்திகள்

பாரந்தூக்கி இயந்திர பழுதுபார்க்கும் போது நேர்ந்த விபத்து: பட்டறை உரிமையாளர் பலி

Share:

மூவார் அருகே பக்ரி தொழிற்பேட்டையில் உள்ள பழுதுபார்க்கும் பட்டறையில் பாரந்தூக்கி வாகனத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அதன் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து இன்று காலை 9.32 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஷரிசால் மோஹ்தார் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கிருந்த மற்றொரு தொழிலாளியின் உதவியுடன் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, வாகனத்திற்குள் சிக்கியிருந்தவரை மீட்டனர். உயிரிழந்தவர் அந்தப் பட்டறையின் உரிமையாளரான 37 வயது புய் வெய் ஹான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News